தமிழ் நாடகத்தில் பெண்; கலைஞர்கள்

Abstract :

தமிழ்ச் சூழலில் பெண்கள் நாடகத்துறையில் ஈடுபடத் தொடங்கி சுமார் அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை, சங்க காலத்தில் பெண் நிகழ்த்துக்கலைஞர்கள் இருந்தமைக்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. ஆனால், அதற்கு அடுத்து வந்த இலக்கியங்களில் பெண் நிகழ்த்துக் கலைஞர்களின் பங்களிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. தமிழ் நாடக மரபில் பாலாமணி அம்மையாரின் பெண்கள் குழு, தனித்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் நாடகத்தில் ஆண் வேடமிட்டு நடித்த கே.பி.சுந்தராம்பாள், விடுதலை இயக்கச் சார்புடைய கலைக் குழுக்களில் செயல்பட்ட பெண்கள் எனப்பெண்களுடைய நாடகச் செயல்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லும் படியாகவே இருந்துள்ளது.

Authors : கி. மகாலட்சுமி, மு.சுப்பையா

Article :  தமிழ் நாடகத்தில் பெண்; கலைஞர்கள்

Received: 11 May 2018
Accepted: 14 June 2018
Published: 28 June 2018
  mahalakshmi-3.pdf