வலவன் ஏவா வானூர்தி” (அகம்-10 – முதுகண்ணன் சாத்தனார்)
“நல்ல செயல்களைச் செய்தோர் தானே இயங்கும் விமானத்தின் மூலம் சொற்கத்தை அடைவர்” என்பது இதன் பொருளாகும்.ஆக, விமானம் மிகவும் பிற்காலத்தில் வந்த ஒன்றுதான் இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட இல்லை. ஆனால் அகநானூறுப் பாடல் வரியானது 21-ம் நூற்றாண்டில் மூலைமுடுக்கெல்லாம் அலசும் ஆளில்லா வான்கலம் (ஸ்ட்ரோன்) பற்றிப் பேசுகிறது. அவ்வகையில் இவ்வாய்வுக்கட்டுரையானது “பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனை” என் தலைப்பில் ஆராய்கிறது.
3000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய அகநானூற்றில்,
வானத்து இயல்புகளையும் அவ்வானத்தில் நாள்மீன்களிலும் கோள் மீன்களாலும் நாள்தோறும் நிகழும் மாற்றங்களையும் அவ் மாற்றங்களின் விளைவுகளையும் நுண்ணறிவுடன் நோக்கி இலக்கியப் பாடல்களில் பாடியுள்ளனர்.
அவ்வகையில் பழந்தமிழ் இலக்கியங்களில் – சங்க இலக்கியத்தில் வான்- எனும் தலைப்புகளில் ஆராயப்பட உள்ளன
Received : 17 December 2023
Accepted : 24 January 2024
Published : 29 January 2024
DOI: 10.30726/ijlca/v11.i1.2024.111001