திருக்குறளில் வாழ்வியல் மேம்பாடு பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும் (குறள்.972)

Author
சா.திருப்பதிசாமி
Keywords
திருக்குறள், வாழ்வியல் மேம்பாடு
Abstract
எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது பொதுஇயல்பு என்று அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியது திருக்குறள். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தமிழ்மறை, பொருளுரை, தெய்வநூல், திருவள்ளுவம் என ஆகச்சிறந்த பெயர்களைக்கொண்டு இவ்வுலகில் மானூடம் திறம்பட மேம்பாடடைய வழிவகை உரைக்கும் நூல் திருக்குறள். வையம் வாழ்வாங்குவாழ அறம், பொருள், இன்பம் என்று முப்பால் அதிகாரங்களை குறள்வெண்பா வடிவில் எடுத்துரைத்தரைத்துள்ளார் வள்ளுவப்பெருமகனார்.
உலகத்தமிழர்களாலும் பிறஇனத்தவராலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் பின்பற்றி கொண்டாடப்படும் நீதிநூல் திருக்குறள் என்பது சிறப்புக்குரியது. இத்திருக்குறளில் மானுட வாழ்வியல் மேம்பாடு என்னும் கருத்தியல் நோக்கோடு அமைவதுதான் இக்கட்டுரையின் பயனாகும்.
References
திருக்குறள்


Received : 20 May 2023
Accepted : 12 July 2023
Published : 18 July 2023
DOI: 10.30726/ijlca/v10.i3.2023.103004

IJLCA-47.10.3.pdf