Keywords
புராணம்; பேரரசர்கள்; புலவர்; சிற்றரசர்; பதினெண் கீழ்க்கணக்கு
Abstract
புராணச் செய்திகள் உவமையாகவும் குறிப்பாகவும் சங்க இலக்கியங்களில் பயின்றுள்ளன. ஆனால் இடைக்கால இலக்கியங்களில் புராணக் கதைக்கூறுகள் மிகுதியாக உள்ளன. இக்கால மக்கள் சமயத்துறையில் பொழுதும் ஈடுபாடுடையவர்களாகக் காணப்பட்டனர். அதன் விளைவின் ஒரு பகுதிதான் புராண இலக்கியம். சமயத்தை வலியுறுத்திப் பாடுதலே இவர்கள் புராணம் எழுதிய நோக்கம் ஆகும். சங்க இலக்கியங்களில் முதன்முதலில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களின் பாடல்கள் தனித் தனிப்பாடல்களாக விளங்கின. பின்பு தோன்றிய பத்துப்பாட்டு தொடர்நிலைச் செய்யுள்களாகத் தொகுக்கப்பட்டது. இவ்வாறு படிப்படியாக வளர்ச்சி பெற்றதற்குப் பின்னர் உரைப்போம் உள்ளக்கருத்து அளவுக்குச் செய்யுள் நீட்சி பெற்றிருப்பது அறியமுடிகிறது.
References
[1] டாக்டர் வே.இரா.மாதவன், தமிழில் தலபுராணங்கள், பக்.25-27.
[2] முனைவர் அரு.மருததுரை புராண இலக்கிய வரலாறு, பக்.104-107.