Author
திருமதி. வெ.லீலாவதி
Keywords
Abstract
சங்க இலக்கியங்கள் என்பது மூன்று சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் ஆகும். தமிழர்கள் எப்பொழுதுமே ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். உலகம் போற்றும் வண்ணம் நம் தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சங்க காலப் புலவர்கள் அறநெறிக் கருத்துக்களை தம் பாடல்களில் எழுதப்பட்டுள்ளது. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியின் முழுநிறை வடிவமே அறம். வீரத்தை போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. அறம் செய்வதை உயிருக்கு மேலாக கருதியவர்கள் தான் தமிழர்கள். பழங்காலத்தில் தமிழர்கள் பொருள் ஈட்டி அறம் செய்து இன்புற்றனர். இவ்வாழ்க்கையையே அறவாழ்க்கையாக் கொண்டிருந்தனர். தமிழர்கள் தன்னலம் துறந்து பொதுநலத்தை உயிரினும் மேலாகக் கருதினார்கள். தம்மிடம் வந்து இரந்த எளிய மக்களுக்கு இல்லை என்று கூறும் அவச் சொல்லைக் கூறுவதை தாழ்வாகக் கருதினார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பிரிவுகளாகப் பிர்க்கப்பட்டு ஒரு வரையறுக்குள் வாழ்வியலைக் கொண்டு வாழ்ந்து பண்பாடு, கலாச்சாரம், அறநெறியுடன் வாழ்ந்தார்கள் எனபதனை தமிழ் இலக்கியங்கள் நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
References
Received: 15 July 2025
Accepted: 21 September 2025
Published: 26 September 2025
DOI: 10.30726/ijlca/v12.i3.2025.123003